முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

எடப்பாடி பழனிச்சாமியும் இரசகுல்லா கடைக்காரரும்

இரண்டு வருடங்களுக்கு முன் 2017இல் ஒரு கல்லூரியில் நேர்காணலுக்காக கொல்கத்தா வரை செல்ல நேர்ந்தது. வங்க மொழி(பங்ளா) தெரியாது, இந்தியும் தெரியாது, தெரிந்ததெல்லாம் தமிழ் மற்றும் இந்திய ஆங்கிலம் மட்டுமே. ஒரு வாரம் அங்கு தங்க வேண்டிய சூழல், ஆனால் அந்த ஒரு வாரத்தில் ஒரு முறை கூட பங்ளாவோ, இந்தியோ தெரியாத குறையை கொல்கத்தா எனக்கு சிரமமாக முன்னிறுத்தவில்லை. டேக்சியில் பேரம் பேசுவது தொடங்கி, பேருந்துகளில், டீ கடைகளில், உணவகங்களில், நான் நேர்காணலுக்கு சென்ற கல்வி நிறுவனத்தில், சுற்றிப் பார்க்க சென்ற இடங்களில் என எங்குமே எனக்கு பங்ளாவோ, இந்தியோ தேவைப்படவில்லை. வங்க மக்கள் என் மொழியின் காரணமாக எனக்கு எந்த குறையையும் வைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இத்தனைக்கும் அவர்கள் நான் வங்க மொழி பேசுபவன் அல்ல என்பதை உணர்ந்ததும் என்னுடன் அதிகமாக உரையாட விரும்பினர் என்றே எனக்கு தோன்றியது. உதாரணமாக நான்கு நாள் நேர்காணலில் ஒரு நாள் நான் தங்கியிருந்த அறைக்கு திரும்புகையில் கொல்கத்தா மாநகரப் பேருந்தில் ஒரு கன்டக்டர், மாநில பேருந்துகளில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களைதான் பணியமர்த்துவார்கள், அவர் ஒரு வங்காளி. அவ...
சமீபத்திய இடுகைகள்

அரசியல் பிழைத்தோர் - 2

மதவாதத்திற்கு முடிவுகட்டுவோம்... 6 மாதங்களுக்கு முன்பாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையிலிருந்து அதன் உறுப்புக் கல்லூரிகளுக்கு(Affiliated Colleges) ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் அறிஞர் அண்ணா எழுதிய 'நீதிதேவன் மயக்கம்' எனும் நாடகம்  பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படுவதாகவும் அதற்கு பதில் அரு.இராமநாதன் அவர்கள் எழுதிய 'இராஜ இராஜ சோழன்' எனும் நாடகம் இணைக்கப்படுவதாக இருந்தது அந்த சுற்றறிக்கை. இதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில் மாவட்ட ஆட்சியருக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டது. ஆட்சியர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோது அந்த துறைத் தலைவர் தன்னை கேட்காமல் இந்த சுற்றறிக்கையை அனுப்பிவிட்டதாகவும் தான் அதை திரும்பப்பெறுவதாகவும் அண்ணாவின் 'நீதிதேவன் மயக்கம்' எனும் நாடகமே பாடத்திட்டத்தில் தொடரும் என்று கூறியிருக்கிறார். மேலும் ஆட்சியர், பாடத்திட்டத்தில் மாற்றம் என்பது அகாடமி கவுன்சிலின் அனுமதி பெறாமல் நடந்திருப்பதற்கு துணை வேந்தரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். நாட்ட...

அரசியல் பிழைத்தோர் - 1

Democracy vs Dictatorship '21ம் நூற்றாண்டில் பிறந்து, இந்த தேர்தலில், நாட்டின் ஜனநாயக வழிமுறைகளில் முதன்முதலாக பங்கெடுக்கப் போகும் இளம் நண்பர்களே, உங்கள் வாக்குகளை உயர்ந்த இலட்சியங்களுக்காக பயன்படுத்தி இந்த தருணத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுங்கள்.' கோவையில் சமீபத்தில் நடைபெற்ற பாஜக வின் தேர்தல் பிரச்சார பொதுக்கூடத்தில் இவ்வாறு குறிப்பிட்டது நம் பிரதமர் நரேந்திர மோடி. இதனை வாசித்து விட்டு அப்படியே கடந்து போகாமல் மீண்டும் இந்த வாசகத்தை பொறுமையாக வாசிக்கிறேன். உண்மையில் பிரதமர் மோடி ஒரு மகோன்னதமான கருத்தை இளைஞர்களுக்கு தன் பேச்சில் கூறியுள்ளார். ஆம்... இன்றைய நிலையில் அப்படி ஒரு உயர்ந்த இலட்சியம் என்றால் அது மற்றுமொரு பாஜக ஆட்சி அமையாமலும் அதன் பிரதமராக மோடி வராமலும் பார்த்துக்கொள்வது தான் என்பதை முதல்முறை வாக்களிக்க போகும் 3.5 கோடி வாக்காளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் மீண்டுமொரு பாஜக ஆட்சி அமைந்தால் இதுவே அந்த இளைஞர்கள் வாக்களிக்கும் கடைசி தேர்தலாக மாறும் அபாயம் கூட அதில் உள்ள...

இடஒதுக்கீடு - சமூக நீதிக்கான பாதை - 5

'இந்தியாவில் சமத்துவம்(Equality) என்பது சமமானவர்களிடம் மட்டுமே நிலவுகிறது, எனவே சமமற்றவர்களை சமமாக நடத்தினால் அது சமனற்ற தன்மையை(Inequality) மட்டுமே நிலைநிறுத்தும்' என்பது சட்ட நிபுணர்களின் கூற்று. இன்றைய நிலையில் நாம் மேற்கண்ட வரிகளை பற்றி மிகவும் ஆழமாக சிந்திக்க வேண்டியிருக்கிறது. 'சட்டத்தின் பார்வையில் நாட்டில் அனைவரும் சமம்தான் என்றால் எதற்கு அரசாங்கமே சட்டம் இயற்றி இடஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்புகளை வழங்க வேண்டும்?'  என்பது இந்த இடஒதுக்கீட்டை எதிர்க்கும் பலர் முன்வைக்கும் அபத்தமான கேள்வி. இதற்கான பதிலை புரிந்துகொள்வதற்கு முன்பாக நாம் நமது நாட்டின் அடிப்படை சமூக கட்டமைப்பை உள்வாங்க வேண்டும். வரலாற்றின் அடிதொட்டு இந்திய சமூகம் பல ஏற்றத்தாழ்வுகளால் நிரம்பியது. எந்த ஆட்சியின் கீழும் இப்போதுள்ள இந்திய நிலப்பரப்பில் சமூகம் சமத்துவமிக்கதாக இருந்ததில்லை என்பதாகவே வரலாறு கூறுகிறது. நாம் 20ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்திரம் பெற்று குடியரசாக மாறியபோது நமது அடிப்படை அரசியல் சாசனம் இவ்வாறு கூறுகிறது, 'இந...

இடஒதுக்கீடு - சமூக நீதிக்கான பாதை - 4

இந்தியாவின் மிக உயரிய கல்வி நிறுவனம் அது, நாடு விடுதலை அடைந்த பின்பு கல்வியில் குறிப்பாக தொழில்நுட்பத்தில், மேற்குலக நாடுகளுக்கு இணையாக இந்தியாவிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் கூர்மையடைய வேண்டுமென்றும் அதற்கான கல்வி மிகச்சிறப்பாகவும் தரமானதாகவும் நாட்டு மக்கள் அனைவருக்கும் பயனடையும் வகையில் அமைய வேண்டுமென்ற உயரிய எண்ணத்துடன் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் சீரிய முயற்சியில் நிறுவப்பட்டவை இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (IITs). அதே போன்று இந்தியாவின் திட்டக் குழுவின் பரிந்துரையின் பேரில் நிறுவப்பட்டவை இந்திய மேலாண்மை கழகங்கள் (IIMs). இன்றைய மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் இந்நிறுவனங்களில் தொடர்ச்சியாக தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு என்பது பின்பற்றப்படுவதே இல்லை. அங்குள்ள பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மற்றும் இதர பதவிகளாக மொத்தமுள்ள 9,640 பணியிடங்களில் 5,466 பேர் பொதுப்பிரிவினரை சேர்ந்தவர்கள். அதிலும் பார்ப்பனர்களே அதிகம். இதில் பிற்படுத்தப்பட்டவர்கள...

இடஒதுக்கீடு - சமூக நீதிக்கான பாதை - 3

'பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இந்த 10% இடஒதுக்கீடு என்பது மத்திய அரசின் மிகவும் குழப்பமான சிந்தனையாகும். மேலும் பொருளாதார சமத்துவமின்மையை போக்குவதற்கான வழி இடஒதுக்கீட்டில் இல்லை, அதற்கான வழி என்பது வாய்ப்புகளை அதிகப்படுத்துவதில் இருக்கிறது. மோடி அரசு கொண்டுவந்துள்ள இந்த முன்னேறிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு என்பது நிலைமையை மேலும் மோசமாக்கும். இந்த நகர்வு என்பது ஏற்கனவே இருக்கும் இடஒதுக்கீட்டை ஒழிப்பதற்கான ஆபத்தை நோக்கி நகர்த்துவதாக இருக்கிறது.' மேற்சொன்ன கருத்து இந்தியாவின் தலை சிறந்த பொருளாதார அறிஞரும், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென் கூறியது. இதில் நாம் கவனிக்க வேண்டியது இந்த பாஜக அரசு இதனை குழப்பமான சிந்தனையில் கொண்டுவரவில்லை, அவர்கள் தெளிவாகவே இதனை செய்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் இது அடிப்படை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும், உச்ச நீதிமன்றத்தில் இடஒதுக்கீட்டிற்கு சமூக மற்றும் கல்வி நிலையுடன் இணைந்த பொருளாதார நிலையை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டுமென்றும் பொருளாதார நிலையை மட்டுமே பிரத்யேகமாக கண...

இடஒதுக்கீடு - சமூக நீதிக்கான பாதை - 2

'ஏழைகளுக்கு உதவி செய்வதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?', 'சாதியில் முன்னேறிய வகுப்பில் இருக்கும் ஏழைகள் எங்குதான் போவார்கள்? மத்திய அரசு நிறைவேற்றியிருக்கும் இந்த 10% இடஒதுக்கீடு அவர்களுக்கு தானே உதவி செய்வதாக இருக்கிறது, அதற்கு எதிராக ஏன் போராட வேண்டும்?' இவ்வாறு இந்த 10% இடஒதுக்கீட்டை ஆதரிக்கும் சிலர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நமது நாட்டில் இடஒதுக்கீடு என்பது பொருளாதார அடிப்படையில் கொடுப்பது சாத்தியமற்றது என்பது தான் நிதர்சனம். ஒரு வாதத்திற்கு பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுக்கலாம் என்று வைத்துக்கொண்டாலும் இப்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்டத் திருத்தம் எந்த ஒரு விதத்திலும் ஏழைகளுக்கு உதவ போவதில்லை. 2005இன் இறுதியில் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு இந்தியாவில் ஏழ்மை நிலையை பற்றி அறிய சுரேஷ் டெண்டுல்கர் என்பவறின் தலைமையில் ஒரு குழுவை அமைக்கிறது. இந்த குழு அதன் அறிக்கையை 2011 ஜனவரியில் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை இந்தியாவில் வறுமைக்கோடு என்பதற்கு ஒரு நியாயமற்ற கணக்கை சொன்னது. அதன்படி ஒரு நபர் ஒரு ந...