'ஏழைகளுக்கு உதவி செய்வதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?', 'சாதியில் முன்னேறிய வகுப்பில் இருக்கும் ஏழைகள் எங்குதான் போவார்கள்? மத்திய அரசு நிறைவேற்றியிருக்கும் இந்த 10% இடஒதுக்கீடு அவர்களுக்கு தானே உதவி செய்வதாக இருக்கிறது, அதற்கு எதிராக ஏன் போராட வேண்டும்?' இவ்வாறு இந்த 10% இடஒதுக்கீட்டை ஆதரிக்கும் சிலர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நமது நாட்டில் இடஒதுக்கீடு என்பது பொருளாதார அடிப்படையில் கொடுப்பது சாத்தியமற்றது என்பது தான் நிதர்சனம். ஒரு வாதத்திற்கு பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுக்கலாம் என்று வைத்துக்கொண்டாலும் இப்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்டத் திருத்தம் எந்த ஒரு விதத்திலும் ஏழைகளுக்கு உதவ போவதில்லை.
2005இன் இறுதியில் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு இந்தியாவில் ஏழ்மை நிலையை பற்றி அறிய சுரேஷ் டெண்டுல்கர் என்பவறின் தலைமையில் ஒரு குழுவை அமைக்கிறது. இந்த குழு அதன் அறிக்கையை 2011 ஜனவரியில் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை இந்தியாவில் வறுமைக்கோடு என்பதற்கு ஒரு நியாயமற்ற கணக்கை சொன்னது. அதன்படி ஒரு நபர் ஒரு நாளைக்கு நகர்ப்பகுதியில் ரூ.33 மற்றும் கிராமப்பகுதியில் ரூ.27 வரை சம்பாதித்தால் அவர் ஏழ்மையானவர் இல்லை என்று வரையறுத்து இந்தியாவின் மக்கள் தொகையில் 22% பேர் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பதாக நிர்ணயித்தது. இந்த அறிக்கை மக்களிடமும், ஊடகங்களிடமும் கடுமையான எதிர்ப்பை சந்தித்தது. எனவே 2012 இல் சி.ரங்கராஜன் என்பவர் தலைமையில் இன்னொரு குழு அமைக்கப்பட்டது. இந்த புதிய குழு அதன் அறிக்கையை 2014ம் ஆண்டு சமர்ப்பித்தது. இது வறுமைக்கோட்டிற்கு புதிய விளக்கமாக 2011-12இல் நகர்ப்புறத்தில் ஒருவர் ரூ.47 மற்றும் கிராமப்புறத்தில் ரூ.32 வரை சம்பாதித்தால் அவர் ஏழை இல்லை என்று வரையறுத்து இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் 29.5% என்று நிர்ணயித்தது.
இந்த இரண்டு அறிக்கையும் உண்மைக்கு எவ்வளவு புறம்பானது? ஒரு அடிப்படை தேவையை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாத ஒரு வருமானத்தை காட்டி அதை சம்பாதித்தால் ஒருவர் ஏழ்மையானவர் இல்லை என்று நிர்ணயிப்பது எவ்வளவு அயோக்கியத்தனம்? இவ்வாறாக வறுமைக்கோட்டை நிர்ணயித்த மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசை கடுமையாக எதிர்த்து அதற்கு மாற்றாக வந்த பா.ஜ.க இப்போது கொண்டுவந்துள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்குக்கான 10% இடஒதுக்கீட்டு மசோதாவில், ஆண்டு ஒன்றில் ஒருவர்க்கு 8 இலட்சத்திற்கும் குறைவாக வருமானம் வந்தாலோ அல்லது 5 ஏக்கருக்கும் குறைவான விவசாய நிலம் வைத்திருந்தாலோ அல்லது 1000 சதுர அடிக்குள் ஒருவரது வீடு இருந்தாலோ அவர் சாதியாக முன்னேறிய வகுப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவராக கருதப்படுவார் என்று கூறுகிறது. அதாவது 2012இல் நகர்ப்புறத்தில் வசிக்கும் ஒரு முற்பட்ட சாதியியைச் சார்ந்த ஒருவர் மாதத்திற்கு 1500 வரை வருமானம் ஈட்டினாலே அவர் ஏழை இல்லை என்று சொன்ன அரசு 2019இல் அவரை ஏழையாக கருதி இடஒதுக்கீடு அளிக்க அவர் மாதத்திற்கு 66,000 வரை சம்பாதிக்கலாம் என்று வரையறுக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில்(2012-2019) ஒரு ஏழை இவ்வளவு சம்பாதிப்பவராக அவர்களது வறுமை நிலைக்கு உண்மையில் இந்த அளவுகோல் என்பது சாதியாக முன்னேறிய வகுப்பில் இருக்கும் சில பிரிவினருக்கே எதிரானது. எனவே இந்த விஷயத்தில் மத்தியில் ஆண்ட காங்கிரஸ், தற்போது ஆளுகின்ற பா.ஜ.க என இரண்டு கட்சிகளுக்கும் ஏழைகளின் மீதோ, சாதியாக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் மீதோ துளியளவும் அக்கறையில்லை என்பதையே காட்டுகிறது. அப்படியானால் இந்த 10% இடஒதுக்கீட்டினால் பயனடைய போவது யார்?

கருத்துகள்