அவனுக்கு தெரியாத ஊரில்
எனக்கு புரியாத மொழியில்
வழி கேட்டான் ஒருவன் என்னிடம்
நகரம் பார்த்துக்கொண்டிருந்தது…
எனக்கே தெரியாத அந்த ஊரில்
அவனுக்கு புரியாத மொழியில்
‘தெரியாது’ என்று சொன்னேன் நான்
நகரம் பார்த்துக்கொண்டிருந்தது…
எங்கள் அருகில் நகரின் பூர்வகுடி ஒருவன்
எட்டு ரூபாய் பேருந்துக்காக காத்திருந்தான்
நகரம் பார்த்துக்கொண்டிருந்தது…
கருத்துகள்