மதுவினால் ஏற்படும் சமூக-பொருளாதார சீர்கேடுகள்
பூமியில் மனிதர்கள் குழுக்களாக மாறி அவர்கள் இனம்,மொழி, மதம், நிலவியல் அமைப்பு போன்று இன்னும் பலவற்றின் அடிப்படையில் சமூகங்களாக ஒரு பண்பட்ட நிலையில் கூடி வாழத்துவங்கியிருந்த காலம்.

செம்மையான இரும்புக்காலம்(கி.மு.1300 முதல் கி.பி.500 வரை) என்றழைக்கப்படும் இந்த காலக்கட்டத்தில், மனித உழைப்பின் மேன்மையாக வேளாண்மைச் செயல்முறைகள் மற்றும் அவற்றிற்கு தேவையான கருவிகள், ஆயுதங்களை தாண்டி சமய நம்பிக்கைகள், கட்டுமானங்கள், அழகியல் பாணிகள் என்று மனிதர்கள் பண்பாட்டு வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியது இந்த காலத்தில்தான்.
சமூகத்துக்கும் மதுவுக்குமான தொடர்பு இங்கேயே ஆரம்பித்து விடுகிறது. பண்டைய எகிப்து மற்றும் மெசபடோமியாவில் கி.மு. 6ம் நூற்றாண்டிலேயே Brewery எனப்படும் மது வடித்தல் நடைபெற்றதாக தொல்லியல் சான்றுகள் கூறுகின்றன. நம்முடைய பண்டைய தமிழ் சமூகத்தில், சங்க இலக்கியங்களில் மது பல்வேறு இடங்களில் தேறல் என்றும் கள்ளு என்றும் குறிக்கப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் 'அமைவிளை தேறல் மாந்திய கானவன்' என்று மூங்கில் கள்ளை வேட்டுவன் பருகியதாக வஞ்சிக் காண்டத்தில் நீர்ப்படைக் காதையில் வர்ணிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரைக் காண்டம் ஊர்காண் காதையில் 'அந்தீந் தேறல் மாந்தினர் மயங்கி' என்று எழுதியிருக்கிறார் இளங்கோவடிகள். மேலும் 'சோம பானம்' எனும் ஒருவித மயக்கமும் கிளர்ச்சியும் தரக்கூடிய பானத்தின் தயாரிப்பு குறிப்புகள் சாம வேதத்தில் கூறப்பட்டுள்ளது. சந்திரக்கடவுளாகிய சோமன் வருகின்ற நள்ளிரவில் இந்த பானம் தயாரிக்கப்படுவதாகவும், இந்த பானத்தினை தயாரிக்க பயன்படும் தாவரம் சோம தாவரம் என்றுள்ளதாலும் இந்த பானம் சோம பானம் என்று அழைக்கப்படுகிறது.
உலகின் பல சமூகங்களில் மனிதர்கள் அவர்கள் நிலத்தின் தட்பவெப்ப சூழ்நிலைக்கேற்ப விளையும் பயிர்கள் மற்றும் அங்கு இயற்கையாக இருக்கக்கூடிய மரங்கள் தாவரங்களில் இருந்து உணவை தயாரித்தது மட்டுமல்லாமல் அவற்றின் வழியாக தங்கள் வாழ்வியலை அமைத்து கொண்டார்கள் (எ-டு: பனை, தென்னை, மூங்கில்,...) . அதன் ஒரு சின்ன கூறு தான் மது. இது அவர்களின் வாழ்வியலில் கேளிக்கைக்காகவும், உழைப்பின் களைப்பை போக்குவதற்கும் ஒரு குறிப்பிட்ட அளவில் மருத்துவத்துக்கும் பயன்பட்டிருக்கிறது. தமிழக அரசர்களுக்கும் யவனர்களுக்கும் இருந்த வணிகத் தொடர்பில் யவனத்திலிருந்து வரவழைக்கப்பட்ட கலை வேலைப்பாடுகளுடைய மதுக் கிண்ணங்கள் கூட முக்கிய இடத்தை பெறுகின்றன.
எனவே மது எனப்படும் போதை வஸ்துகள் முற்காலத்திலிருந்தே சமூகத்தில் புழக்கத்தில் இருந்துள்ளன. ஒரு போர் முடிவுற்ற பிறகு, போரின் இழப்புகளில் இருந்தும், மனதில் படிந்துள்ள குருதிக் கரைகளிலிருந்தும் மீண்டும் போர் வீரர்கள் அவர்களின் இயல்பான சமூக வாழ்க்கைக்கு திரும்புவதற்கு கூட மது பயன்பட்டிருக்கிறது என்பதுதான் நிதர்சனம். சீனாவின் அபினிப் போர்கள் என்பதெல்லாம் பதிவுசெய்யப்பட்ட வரலாறு. இதன் மூலம் குடிமக்களும் ,முடிமக்களும் மதுவை அவர்கள் வாழ்வில் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது புரிய வருகிறது.
ஆனால் அப்போது ஒரு சமூகத்தில் மதுவை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதற்கான குறிப்புகளைத் தாண்டி இந்த மதுவை ஒரு கூறாக கொண்டு அதனால் ஏற்பட்ட சமூக-பொருளாதார விளைவுகள் பற்றிய ஆராய்ச்சிகள் நடைபெற்றதற்கான குறிப்புகள் எதுவும் இல்லை. அப்படி ஆராய்ச்சிகள் நடைபெற்றிருக்க வாய்ப்புகளும் மிக குறைவு. அதனால் மது பற்றிய குறிப்புகளை நிராகரிக்கவும் தேவையில்லை, அவற்றை இன்றைய சூழலுக்கு அப்படியே ஏற்றுக்கொள்ளவும் தேவையில்லை.
அன்றிலிருந்து பல நூற்றாண்டுகள் கடந்து, அறிவியலில் அதிவேகமாக பலமடங்கு முன்னேறி, சமூகவியலை பல்வேறு தளத்தில் ஆராய்ந்தது மட்டுமன்றி இன்னும் மனித வாழ்வை எப்படியெல்லாம் மேம்படுத்தலாம் என்று உலக நாடுகள் ஆராய்ந்து கொண்டிருக்கும் இந்நாட்களில், உடலுழைப்பு என்பது வெகுவாக குறைந்து வரும் இந்நாட்களில், சமூகத்தில் மதுவின் பங்கு என்னவாக இருக்கிறது என்பதை இங்கு விவாதிக்க வேண்டியிருக்கிறது. இன்றைய தினம் மது பற்றி நமக்கு கிடைக்கக்கூடிய தரவுகள் கொஞ்சம் அதிர்ச்சி அளிக்க கூடியதாய் இருக்கின்றன.
பெரும்பாலும், தனிநபர் ஒருவர் ஒரு குறிப்பிட்ட வயதில் மதுவைப் பற்றி அறிந்து நண்பர்களுடனோ, தன் வயதை ஒத்த உறவினர்களுடனோ கேளிக்கைக்காக எப்போதாவது அருந்தி வந்த மது இன்று பரவலாக்கப்பட்டுள்ளது. இன்று மேலே சொன்ன மதுவைப் பற்றி அறியும் 'குறிப்பிட்ட வயது' என்பது தொடர்ந்து குறைந்து வருவதும், மது அருந்தும் இடைவேளை 'எப்போதாவது' என்பது 'அவ்வப்போது' என்று மாறி அதன்பின் இன்று 'அடிக்கடி' என்று மாறிவிட்டது. 1980களில் குடிப்பவர்களின் குறைந்தபட்ச வயது 26 ஆக இருந்தது. 2007லேயே அது 17 ஆகக் குறைந்துவிட்டது. அசோசெம்(The Associated Chambers of Commerce & Industry of India) என்கிற வர்த்தகக்கூட்டமைப்பின் சமூக வளர்ச்சிப் பிரிவு செய்த ஆய்வில், 19-26 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் மத்தியில் குடிப்பழக்கம், 60 சதவீதம் அதிகரித்துள்ளது தெரிய வருகிறது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் பதின் வயதுகளில் குடிப்பழக்கம் 100 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. வளரும் நாடுகளில் அங்கிருந்த மரபான மதுபானங்கள் குறைந்து வருவதும் அதைவிட வேகமாக பரவலாக செயற்கை வேதிப்பொருட்கள் மூலம் போதையூட்டும் பானங்கள் அதிகளவில் தயாரிக்கப்பட்டு அதற்கான சந்தை வளர்ந்து வருவதாக உலக சுகாதார நிறுவனத்தின் இன்னொரு ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வுகள் நமக்கு சமூகத்தில் மதுவின் தாக்கங்கள் பற்றிய சிறிய அளவீடுகளை வெளிப்படுத்துகிறது. இன்னும் பல ஆய்வுகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. இங்கு நாம் மதுவின் சமூக-பொருளாதார தாக்கத்தை பல அளவுறுகளை கொண்டு ஆராய வேண்டி இருக்கிறது.
குடும்பம்:
சமூக அடுக்குகளில் ஒரு தனிமனிதனின் மதுப்பழக்கத்தினால் ஏற்படும் முதல் பாதிப்பு அவர் சார்ந்த குடும்பத்திலிருந்து தொடங்குகிறது. ஒரு குடும்பத்தில் ஒருவர் மது அருந்தினால் முதலில் அவரிடம் இருந்து குடும்பத்தினர் மனதளவில் அந்நியமாக இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதற்கு காரணம் மது அருந்தியவருடைய மனம் நிலையாக இருப்பதில்லை. இங்குதான் குடும்பத்தின் சமநிலை தவற ஆரம்பிக்கிறது. பெரும்பாலும் உழைக்கும் வர்க்கத்தினர் வேலை முடிந்து குடும்பத்தினருடன் செலவிட வேண்டிய மாலை நேரங்களில் மது அருந்துவதால் அவர்களது குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கின்றன. அவர்களின் குடும்ப பொறுப்புகளில், சில குழப்பங்களில் தெளிவான முடிவுகளை ஆண்-பெண் இருவரும் இனைந்து சமமாக எடுக்க முடிவதில்லை. குடும்பத்தில் பிரச்சினைகள் சகஜம்தான் என்றாலும் அதில் மதுவினால் ஏற்படும் கூடுதல் பிரச்சினைகள் அதிகரிப்பதுடன் சிலசமயம் அடிதடியில் முடிகிறது. இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்களாக இருக்கிறார்கள். இன்று காவல் நிலையங்களில் மது அருந்திவிட்டு கணவன் மனைவியை அடிப்பதாகவும், துன்புறுத்துவதாகவும் வரும் புகார்கள் அதிகரிப்பதாக வெகுஜன ஊடகங்களில் வரும் செய்திகளால் அறிய முடிகிறது.
குடும்பத்தில் உள்ள இளம் வயதினர் மதுவுக்கு அடிமையானால் அவர்கள் வாழ்க்கை கேள்விக்குறி ஆகும் சூழல் உருவாகும். அடிக்கடி மது அருந்தும் இளைஞர்களுக்கு, உடனடியாக இல்லை என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் கவனம் சிதறடிக்கப்படுவதுடன் அவர்களின் ஆற்றல் குறையும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இங்கே மேலே குறிப்பிட்ட ஆய்வுகளை பொருத்தி பார்க்க வேண்டியுள்ளது. மது அருந்த தொடங்குபவர்களின் சராசரி வயது குறைந்து கொண்டே வருகிறது என்று தெரிவிக்கும் அந்த ஆய்வின் தொடர்ச்சியாக இந்தியாவில் அதிர்ச்சியளிக்கும் விதமாக கேரள மாநிலத்தில் மது அருந்த தொடங்குபவர்களின் வயது 12 வரை குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே மதுவினால் குடும்பங்களில் பிரச்சினைகள் அதிகரிப்பது அது சார்ந்த சமூகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.
சுகாதாரம்:
'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்று விழிப்புணர்வு அடையவேண்டிய சமுதாயத்தில் இதற்கு நேரெதிராக மனிதர்களே அவர்கள் உடலின் பலவிதமான நோய்களுக்கு சிகப்பு கம்பளம் அளித்து வரவேற்பது போன்றது மதுப்பழக்கம். மதுவினால் உடல்நலம் பல்வேறு வகைகளில் பாதிக்கும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து கூறிவரும் நிலையில் பல்வேறு ஆய்வுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. மதுவினால் இரத்த சோகை, புற்று நோய், இதய நோய்கள், கல்லீரல் பாதிப்பு, ஞாபக மறதி, மன அழுத்தம், உடல் தளர்வு மற்றும் பல வியாதிகள் வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகமாக உள்ளது. இது போல் கிராமம் நகரம் என்ற பேதமில்லாமல் வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் ஆண்கள் பலரும் கூட மதுவிற்கு அடிமையாகி இருப்பதும் மேலும் அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை எடுக்க இயலாத நிலையில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது ஒரு மோசமான நிலையாகும், இந்நிலையிலிருந்து அவர்களை மீட்டு நல்வாழ்வு(Rehabiliation) அளிக்க வேண்டும். இதற்கு பல மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.
தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் அந்த கிராமத்தில் உள்ள சராசரியாக 37 வயதையொட்டிய ஆண்களில் 35.7 சதவீதம் பேர் மது அருந்துபவர்களாக இருப்பதாகவும் அதில் 4.5 சதவீதம் ஆண்கள் தீவிரமாக மதுவினால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்து வருவது தெரியவந்துள்ளது. இன்னும் சிலர் வசதிகள் இல்லாததால் சிகிச்சை எடுக்க இயலாத சூழ்நிலையில் உள்ளதாக தெரிய வருகிறது. இது ஒரு கிராமத்தில் உள்ள நிலை. இதனை போன்று விரிவான ஆய்வுகள் பல நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் சமீப காலமாக இதுபோன்ற ஆய்வுகளின் முடிவுகள் கவலை அளிக்க கூடியதாக அமைகின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் மது பற்றிய 2014ம் ஆண்டு வந்த சிற்றேடு மதுவினால் ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்கள் வரக்கூடும் என்பதும் காச நோய்கள் போன்ற நுரையீரல் பாதிப்புகளும் ஏற்படும் என்று அதன் ஒரு பகுதி விளக்குகிறது. சமூகத்தில் நோய்களின் தாக்கங்கள் நாம் அறிந்த ஒன்றே, ஆனால் அதிலும் மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் நாம் தவிர்க்க கூடியதாய் இருந்தும் தவிர்க்க முடியாமல் அதிகரிப்பது வேதனையளிக்கின்றது. மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவதால் ஏற்படும் சாலை விபத்துகள் அதிகரிக்கின்றன. இதற்கென ஏற்கனவே சாலை விதிமுறைகளில் மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவது குற்றம் என்று வரையறுக்கப்பட்ட பின்னும் இது தொடர்வது மிகப்பெரிய அவலம். மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவதால் ஏற்படும் விளைவுகள் என்பது அடுத்த வாகனத்தில் நல்ல நிலையில் பயணப்பட்டுக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் மற்றும் அது அவர்கள் உயிர் போகும் அளவிற்கான அபாயத்தையும் கொண்டிருப்பதுதான் துயரம்.
பொருளாதாரம்:
நுகர்வு கலாச்சாரத்தில் தண்ணீரும் வணிகமயமாக்கப்பட்ட இந்த சூழலில் சமூகத்தில் மக்களாகிய நாம் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைய முயன்று கொண்டிருக்கின்றோம். அதை அடைவதன் மூலம் மற்ற விடயங்களை எளிதில் அடையலாம் என்று நம்புகிறோம். இதில் நமக்கு விமர்சனங்கள் இருப்பினும் யதார்த்தம் இதுதான். இத்தகைய சூழலில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுள் ஒருசிலர் மதுவுக்கு அடிமையானால் கூட அது அவர்கள் வாழ்வில் பொருளாதார மேன்மை அடைய மிகப்பெரிய தடையாக இருக்கும். இங்கு துரதிஷ்டவசமாக மதுவுக்கு அடிமையானவர்களில் கணிசமானவர்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களாக இருக்கின்றார்கள். இதனால் அவர்கள் அவர்களுடைய குடும்பத்தின் அடிப்படை தேவைகளுக்கு கூட மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் கூட பாதிப்படையும் அபாயத்தில் இருக்கின்றார்கள். சில குடும்பங்களில் பெண்களே பொருள் ஈட்டுவது, குழந்தைகளை வளர்ப்பது, வீட்டை பராமரிப்பது என்று குடும்பத்தின் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.
இங்கே மதுவிற்கு அடிமையான வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ள கீழ் நடுத்தர வர்க்கத்தினர் மதுவின் காரணமாக அவர்கள் சேமிப்பின் பெரும்பகுதியை அதனால் வந்த நோய்களின் சிகிச்சைகளில் செலவு செய்கிறார்கள். இதிலும் சேமிப்புகள் இல்லாத ஏழை மக்களின் துயரம் சொல்லி மாளாதது.
இங்கு நாம் மதுவினால் ஏற்படக்கூடிய பொருளாதார தாக்கங்களை இன்னும் விரிவான தளத்தில் ஆராய வேண்டியிருக்கிறது. கால மாற்றத்தில் இன்று மது விநியோகத்தை அரசே ஏற்று நடத்துகிறது. மதுவினால் அரசுக்கு வரும் வருவாய் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதில் கிடைக்கும் வருவாயின் மூலம் இதர திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதும் நடந்து வருகிறது. நம் சமூகத்தில் மதுவின் புழக்கத்தை குறைப்பதற்கு மது விலக்கு அமுல் படுத்தவேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கின்றோம். அதில் சந்தேகமேயில்லை. இப்பொழுது நம் கவனம் என்பது மது ஒழிப்பின் மூலம் சமூகம் வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும் அதே நேரம் மது விநியோகம் வழியாக வந்துகொண்டிருக்கும் வருவாய் என்பது இதர வழிகளில் வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இவை இரண்டையும் இணைத்து செய்ய வேண்டும் (Parallel Process). இதற்கு உதாரணமாக நம் மாநிலத்தின் மது விலக்கு நடைமுறையில் இருந்த விதத்தை ஆராயலாம். அது மட்டுமல்லாமல் தற்போது மது விளக்கு நடைமுறையில் இருக்கும் பீகார், குஜராத், லட்சதீவுகள், நாகலாந்து போன்ற மாநிலங்களை ஆலோசனை கேட்கலாம். கேரளா போன்று மது விளக்கை பல கட்டங்களில் நடைமுறைக்கு கொண்டுவரலாம்.
மற்றவை:
தொழில், விளையாட்டு, கலை, என்று பல தளங்களிலும் மது தனி நபரின் கவனத்தை சிதைத்து அவர்கள் திறமைகளை மழுங்கடிக்கிறது. உழைப்பின் மீது இருக்கும் நாட்டத்தை குறைத்து தேவையற்ற கேளிக்கைகளில் மனிதர்களை மூழ்கடிக்கின்றது. விளையாட்டில் போதை மருந்து பயன்படுத்தி வெற்றி பெறுவது அந்த விளையாட்டில் போட்டியில் இருக்கும் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு இழைக்கும் அநீதி ஆகும். இதனை தடுக்க இப்போது பல நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்து விட்டது. இருந்தும் பயிற்சியின் போது உத்வேகத்துக்காக எடுத்துக்கொள்ளும் போதை வஸ்துக்கள் அப்போதைக்கு அதீத ஆற்றலை கொடுத்தாலும் வீரர்களின் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிப்பதேயாகும். தொழிற்கூடங்களில் மது அருந்திவிட்டு வேலை செய்வது தடை செய்யப்பட்டிருக்கும்போதும் ஆங்காங்கே இது நடந்து கொண்டுதான் இருக்கிறது. உலகளவில் எத்தனையோ சிறந்த இசைக்கலைஞர்கள் மதுவிற்கு அடிமையாகி அவர்கள் வாழ்நாளை குறைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
எனவே மது என்பது மருத்துவ துறையில் குறிப்பிட்ட சிறிய அளவில் பயன்படுகிறது என்பதை தாண்டி சமூகத்தில் மது பெரும்பாலும் மனிதர்களின் ஆற்றலை சிதைப்பதாகவே உலவி வருகிறது. எனவே நாம் நம் தேசத்தந்தை காந்தியடிகள் போன்றோரின் அறிவுரைகள் கொண்டு மதுவை புறக்கணித்து, மதுவிற்கு அடிமையானவர்களுக்கு விழிப்புணர்வு அளித்து அவர்களை அதிலிருந்து விடுவித்து நல்வாழ்விற்கு வழிகாட்டவேண்டியது நம் தலையாய கடமையாய் இருக்கின்றது. இதுபோன்ற செயல்கள் தான் ஒரு பண்பட்ட சமூகத்தை கட்டமைப்பதற்கான வழியாகும்.
மதுவை ஒழிப்போம்! மனித வாழ்வை மேம்படுத்துவோம்!!

கருத்துகள்