முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இடஒதுக்கீடு - சமூக நீதிக்கான பாதை - 1

'திறமைக்கு மரியாதை இல்லை சார்... எல்லாம் கோட்டால உள்ள வந்து சிஸ்டமே பாழாகிடுச்சு', 'ரிசர்வேஷன் முறையை ஒழிச்சா மட்டுமே கரெக்டா  வரும் தம்பி', '98 மார்க் எடுத்த எனக்கு சீட் இல்ல... 90 மார்க் எடுத்த அவருக்கு  சீட்டா???', 'அவங்க அப்பா ஹெட்மாஸ்டர் அம்மா டீச்சர் அவங்க பையனுக்கு சீட்... எங்க அப்பா தொழில்தான் பன்றாரு.. ஒப்பீட்டளவில அவங்கள விட குறைவான வருமானம் தான்,  எனக்கு சீட் இல்லையா???' இட ஒதுக்கீடு தொடர்பாக இதுபோன்ற குரல்கள் ஆங்காங்கே ஒலிக்க கேட்டிருக்கிறேன். எனக்கே கூட சில வருடங்களுக்கு முன்பு வரை இட ஒதுக்கீடு குறித்த மாற்றுக் கருத்துகள் இருந்திருக்கின்றன. பின்னாளில் ஏற்பட்ட ஒரு அடிப்படை அரசியல் புரிதலாலும், ஒரு திராவிடன் என்ற முறையிலும், திராவிடக் கொள்கைகளின் மேல் அளப்பரிய பற்றுள்ளவன் என்ற முறையிலும், தமிழ்நாட்டில் திராவிடக் கொள்கைகளினால் ஏற்பட்ட சமூக மறுமலர்ச்சியை (Renaissance) அறிந்து கொள்ளும் முயற்சியில் இட ஒதுக்கீடு பற்றிய பார்வைகள் முற்றிலுமாக கடந்த இரு வருடங்களில்  மாறிவிட்டன.  இந்நாளில் திராவிட கொள்கைகளின் நோக்கம் ப...