முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Socio-Economic Ramifications of Alcohol on Society

மதுவினால் ஏற்படும் சமூக-பொருளாதார சீர்கேடுகள் பூமியில் மனிதர்கள் குழுக்களாக மாறி அவர்கள் இனம்,மொழி, மதம், நிலவியல் அமைப்பு போன்று இன்னும் பலவற்றின் அடிப்படையில் சமூகங்களாக ஒரு பண்பட்ட நிலையில் கூடி வாழத்துவங்கியிருந்த காலம். செம்மையான இரும்புக்காலம்(கி.மு.1300 முதல் கி.பி.500 வரை) என்றழைக்கப்படும் இந்த காலக்கட்டத்தில், மனித உழைப்பின் மேன்மையாக  வேளாண்மைச் செயல்முறைகள் மற்றும் அவற்றிற்கு தேவையான கருவிகள், ஆயுதங்களை தாண்டி சமய நம்பிக்கைகள், கட்டுமானங்கள், அழகியல் பாணிகள் என்று மனிதர்கள் பண்பாட்டு வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியது இந்த காலத்தில்தான். சமூகத்துக்கும் மதுவுக்குமான தொடர்பு இங்கேயே ஆரம்பித்து விடுகிறது. பண்டைய எகிப்து மற்றும் மெசபடோமியாவில் கி.மு. 6ம் நூற்றாண்டிலேயே Brewery எனப்படும் மது வடித்தல் நடைபெற்றதாக தொல்லியல் சான்றுகள் கூறுகின்றன. நம்முடைய பண்டைய தமிழ் சமூகத்தில், சங்க இலக்கியங்களில் மது பல்வேறு இடங்களில் தேறல் என்றும் கள்ளு என்றும் குறிக்கப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் ' அமைவிளை தேறல் மாந்திய கானவன் ' என்று மூங்கில் கள்ளை வேட்டுவன் பருகியதாக வஞ்சிக் ...